இஸ்லாமும் பஹாய் சமயமும்

எல்லா உலக சமயங்களையும் இணைத்திடும் ஓர் அடிப்படையான ஒற்றுமையை பஹாய் சமயம் பிரகடனம் செய்கின்றது. அனைத்துமே அவற்றின் தோற்றுவாயின் ஒருமைத்தன்மையின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. பஹாய் சமயத்திற்கும் வெவ்வேறு சமயங்களுக்குமிடையிலான உறவுகள் பல்வேறு அகப்பக்கங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இஸ்லாத்திற்கும் பஹாய் சமயத்திற்குமிடையிலான உறவும் அதன் குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அது நேரம், பூகோளம் இரண்டின் கோணத்திலும், இவ்விரண்டு சமயங்களுக்கிடையிலான நெருக்கத்தால் தாக்கமுறுகிறது.



பஹாய் சமயத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையே ஒரு நல்ல புரிந்துகொள்ளலையும் உறவையும் மேம்படுத்துவதற்காக இத்தளம் அமைக்கப்பட்டது.

பத்தொன்பதாம நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பம் கண்ட பஹாய் சமயம், அது உதிப்பிடத்தில் பலரால் சந்தேகத்துடனும் நம்பிக்கையின்மையோடும் கருதப்படுகின்றது. அதன் மூலாதாரம், இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து பன்மடங்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறைந்த பட்சமாக, அது இஸ்லாத்தின் வழிதவறிய மற்றும் அற்பமானதொரு மதப்பிரிவு என இகழப்பட்டுள்ளது.

இத்தளத்தின் பக்கங்கள் இப்பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு பணிவுமிகு முயற்சியாகும்.

தன்னிச்சையான ஆராய்வு. உண்மையின் ஆர்வலர் அனைவருக்குமான ஒரு முன்நிபந்தனை.