கடவுளின் ஒப்பந்தம்
பல்வகை தொடர்புகளையும் உடன்படிக்கைகளையும் வருணிக்க புனித குர்’ஆனில், ஒப்பந்தம் எனும் சொல் பலதரப்பட்ட சூழல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, பல வசனங்களில், கடவுளின் பாதுகாப்பிற்காகவும் சலுகை மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் நாம் அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளுக்கு இணங்கவே வாழ்ந்து, அவரது தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென மனிதகுலத்துடனான கடவுளின் தொன்மையான ஒப்பந்தம் குறித்து நாம் படித்துள்ளோம்.
மனிதகுலத்துடனான கடவுளின் ஒப்பந்தம்
நாம் இஸ்ரேலின் குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டபோது: அல்லாவைத் தவிர்த்து வேறு எவருக்கும் நீ சேவையாற்றிடாதே, (உம்) பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அநாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நல்லது செய். மனிதரிடம் நல்ல வார்த்தைகளையே பேசு. பிரார்த்தனை செய்து ஏழைகளுக்கு உதவிடு. பிறகு உங்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் திரும்பிவிட்டனர். (இப்பொழுதும்) நீங்கள் திசைமாறிவிட்டனர்.
- குர்’ஆன் 2:83
“நீங்கள் உங்கள் முகங்களை மேற்கேயும் கிழக்கேயும் திருப்பிடுவது கடவுள் பக்தியல்ல. கடவுளிலும் இறுதி நாளிலும் நம்பிக்கைகொள்வது. . .அடிமைகளை மீட்பது, பிரார்த்திப்பது, தர்மம் செய்வது ஆகியவைதான் உண்மையான கடவுள் பக்தி. தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றிடுபவர் நீடித்த மனோபலத்தைக் கொண்டிருப்பர்.”
- குர்’ஆன் 2:177
“. . ., (வழியை) நிராகரித்திட்டவர்களைத் தவிர மற்றவர்களை அவர் வழி தவற செய்திட மாற்றார், -- உறுதிசெய்யப்பட்ட பிறகு அல்லாவின் ஒப்பந்தத்தை மீறிடுவோர், அல்லா இணைத்திடுவதற்காக ஆணையிட்டவற்றை தூண்டாடிவோர் மற்றும் பூமியில் தொந்தரவு செய்திடுவோர்: இவை அவர்களுக்கு இழப்பினை (மட்டுமே) ஏற்படுத்திடும்.”
- குர்’ஆன் 2:27
இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கம் கடவுளின் தூதர்களை ஏற்றுக்கொள்வதாகும்:
உண்மையாகவே நாம் இஸ்ரேலின் குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டு அவர்களுக்குத் தீர்க்கதரிசிகளை அனுப்பினோம்; ஆனால், அவர்களது உள்ளம் விரும்பிடாத ஒரு தீர்க்கதரிசி அவர்கள்முன் தோன்றியபோதெல்லாம் (அவர்களில்) சிலர் அவரைப் பொய்யன் என்று கூறினர், சிலர் அவரை எதிர்க்கவும் செய்தனர்.
- குர்’ஆன் 5:70
“ஆதாமின் குழந்தைகளே! உங்கள் மத்தியிலுள்ள ஒருவர் தீர்க்கதரிசியாகத் தோன்றி, எமது வசனங்களை வெளிப்படுத்திடும்போது, அவற்றின்பால் அக்கறை செலுத்தி, திருந்திடுபவருக்கு அச்சமோ வருத்தமோ இருக்காது.”
- குர்’ஆன் 7:35
இவ்வசனம் தொடர்பான (யூசுப் அவர்களின்) மற்றுமொரு மொழிபெயர்ப்பு:
“ஆதாமின் குழந்தைகளே! உங்கள் மத்தியில் உள்ள ஒருவர் தீர்க்கதரிசியாகத் தோன்றி எமது அடையாளங்களை உங்களுக்கு வெளிப்படுத்திடும்போது, --- (தங்கள் வாழ்க்கையை) சீர்படுத்திக்கொள்ளும் நேர்மையாளர்கள் ,--- அவர்களுக்கு அச்சமோ வேதனையோ இருக்காது.