அல்-கியாமா (மறு உயிர்த்தெழுதல்)

முஸ்லிம் அறிஞர்கள் மூன்று வகை மறு உயிர்த்தெழுதல் பற்றி பேசுகின்றனர்.

ஒவ்வொரு தனிநபரின் மரணத்தின்போது, அவரது ஆன்மா விடுவிக்கப்பட்டு அவர்தன் செயல்களுக்கான வெகுமதியைக் கண்டுகொள்ளும்போது நிகழும் (அல்-கியமத்துல் சுக்ரா) குறைந்த அளவான மறு உயிர்த்தெழல்.

  1. ஒரு திருத்தூதரின் வருகையால் சமயம் புதுப்பிக்கப்பட்டு ஆன்மீக வாழ்வு புத்துயிரளிக்கப்பட்டு வியாபிக்கச்செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு தேசத்தின் நம்பிக்கையாளர்கள் தொடர்பான (அல்-கியாமத்துல் உஸ்தா) நடுத்தரமான மறு உயிர்த்தெழல்.
  2. ஒட்டுமொத்த மனிதகுலத்தினர்க்கும் தீர்ப்பு நாள் அல்லது இறைவனின் நாள் என எல்லா சமயங்களாலும் முன்னறிவிக்கப்பட்டுள்ள (அல்-கியாமத்துல் உத்மா) மாபெரும் மறு உயிர்த்தெழல்.

மூன்றாவது வகை மறு உயிர்த்தெழலே இந்த அத்தியாயத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.


தீர்ப்பு நாள்

(ஒன்றுகூடும் நாள், கடவுளைச் சந்திக்கும் நாள், மறு உயிர்த்தெழல் மற்றும் மாபெரும் அறிவிப்பு என்றும் அறியப்படும்) அல்-கியாமா, யாவ்முல் டீன் அதாவது தீர்ப்பு நாள் எனும் பிரதான விவகாரம், மாபெரும் வாக்குறுதி, குர்ஆனில் மட்டுமின்றி மற்ற முக்கிய சமயங்களின் புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பு நாள் என்பது சிலருக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துப் புரட்சி மற்றும் பேரிடர்க்கான நேரம் என்பதிலும், பலருக்கு இந்த உலகின் முடிவைக் குறிக்கிறது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர்களுக்கிடையில் பொதுவான கருத்தொற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது.

அந்நாளை ஒவ்வொருவரும் நிச்சயமாக அறிந்திடுவர், என்பது மற்றுமோர் ஏற்கத்தக்கக் கருத்தாக இருக்கின்றது – (தனிச்சிறப்புமிக்க அந்நிகழ்வினைப் பற்றி அறிந்திடாமல் எப்படி ஒருவர் இருக்க முடியும்?)

அல்-கியாமா பற்றி குர்’ஆனின் பலவேறான வசனங்களும் (சில ஹடிஸ்களும்) நமக்கு என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வதே இந்த ஒரு முயற்சியாகும். (அடிப்படையிலேயே முரண்பாடு இருந்திடினும்) அந்த நிகழ்வு குறித்து மாறுபட்ட விளக்கங்களாகத் தோன்றவல்லவற்றை ஒருங்கிணைப்பதுவும் ஒரு பணிவான முயற்சியாகும்.

பொதுவான அடையாளங்களும் வருணனைகளும்