பஹாய்கள் இஸ்லாத்தை எவ்வாறு பார்க்கின்றனர்
எவரது தோற்றத்தின் மூலம், பதா(மெக்கா) புன்னகையெனும் மலர்வளையம் அணிவிக்கப்பட்டும் எவரது ஆடையின் இனிய நறுமணம் மனித இனம் முழுவதன் மீதும் வீசச் செய்யப்பட்டும் உள்ளதோ – எவர் கீழுலகத்தில் மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடியதினின்று பாதுகாப்பதற்காக வந்திட்டாரோ, அவர்மீது3 ஆசீர்வாதமும் அமைதியும் பொழியப்படுமாக. உயர்வானது, அளவிடற்கரிய உயர்வானது அவரது ஸ்தானம்; அது, படைப்பினத்தின் பாராட்டுதலுக்கெல்லாம் மேலானதும் படைப்புலகம் முழுவதன் போற்றுதலிலிருந்து தூய்மைப் படுத்தப்பட்டதுமாகும். அவரது வருகையின் மூலமாகத் திடநிலை, ஒழுங்கு என்னும் திருக்கூடாரம், உலக முழுவதிலும் எழுப்பப்பட்டு, நாடுகள் மத்தியில் அறிவுக் கொடி ஏற்றப்பட்டது. அவரது சுற்றத்தார்கள் மற்றும் தோழர்கள் ஆகியோரின் மீதும் ஆசீர்வாதம் பொழியப்படுமாக; அவர்களின் மூலமாகவே இறைவனின் ஒருமைத்தன்மை, ஏகத்துவம் ஆகியவற்றின் கொடி மேம்பாடுறச் செய்யப்பட்டுத் தெய்வீக வெற்றியின் சின்னங்கள் பறக்கவிடப்பட்டன. அவற்றின் வழியாக இறைவனின் சமயம், அவரது படைப்பினங்களிடையே உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டு, அவரது நாமமும் தமது ஊழியர்கள் மத்தியில் மிகைப்படுத்தப்பட்டது.
- கித்தாப்-இ-ஆக்டாஸிற்குப் பிறகு வெளிப்படுத்தப்பட்ட நிருபங்கள், பக. 162
பஹாய் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் என்பதோடு அஃது இஸ்லாம் சமயத்தின் ஒரு மதப் பிரிவல்ல என்றாலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் இஸ்லாம் சமயத்தின் மீது கொண்டுள்ள தவறான கருத்துகளை பஹாய்கள் திருத்த வேண்டிய கடமை குறித்து, ஷோகி எஃபெண்டி (பஹாய் சமயத்தின் பாதுகாவலர் 1921 – 1957), பெரிதும் வலியுறுத்துகின்றார்.
மேற்கில் பொதுப்படையாக இஸ்லாம் பற்றி நீங்கள் களைந்திடுவதற்கான தப்பபிப்ராயங்கள் அதிகமாகவே உள்ளன. உங்கள் பணி சிரமமானதுதான். ஆகவே, அதனை மேற்கொள்ள அதிகப்படியான புலமை தேவைப்படுகின்றது. குர்’ஆனில் குறிக்கப்பட்டுள்ள [முகமதுவின்] தூய்மையான போதனைகளை நண்பர்கள் அறிந்திடச் செய்வதே உங்களது தலையாய பணியாகும். அதன் பிறகு, இப்போதனைகள் அடுத்தடுத்த காலகட்டத்தில் எங்ஙனம் மனித மேம்பாட்டின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது, வழிகாட்டியது என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். அதாவது, நாகரிகத்தின் வரலாற்றில் இஸ்லாத்திற்கு இருக்கின்ற ஸ்தானம் மற்றும் தனித்தன்மையை நீங்கள் எடுத்துக்காட்டிட வேண்டும்.’
- ஷோகி எஃபெண்டி, (பஹாய் சமயத்தின் பாதுகாவலர்). வழிகாட்டும் விளக்கு, புது டெல்லி: பஹாய் வெளியீட்டுக் கழகம், 2வது மறு ஆய்வு செய்யப்பட்ட பெரிதாக்கப்பட்ட பதிப்பு, 1998, #1664.
இறுதியில் இஸ்லாத்தின் உண்மையை நிலைப்படுத்திடுவதே அமெரிக்க பஹாய்களின் சமயப்பணி என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.’
- ஷோகி எஃபெண்டி, வழிகாட்டும் விளக்கு, #1665.
இஸ்லாம் சமயம் பற்றி, பஹாய்கள் கற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகையில், ‘சமயம் பற்றி முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள’ அதைக் கற்க வேண்டியது ‘தவிர்க்கவே இயலாத ஒன்று’ என்கிறார்.
- வழிகாட்டும் விளக்கு, #1903.
பஹாவுல்லா எனும் நாமத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சமயம், தனக்கு முன்னர் தோன்றிய எந்தவோர் இறைத்தூதுவரையும் அது சிறுமைப்படுத்திடுவதிடவோ அவர்களது எந்தவோர் போதனையையும் துண்டாடிடவோ அவர்களது வெளிப்பாட்டின் பிரகாசத்தினை ஒரு சிறிய அளவேயாயினும் மறைத்திடவோ அவர்களது நம்பிக்கையாளர் இதயங்களிலிருந்து அவர்கள(இறைத்தூதர்களை) அகற்றிடவோ அவர்களது போதனைகளின் அடிப்படையை அழித்திடவோ அவர்கள் வெளிப்படுத்திய நூல்கள் எதையேனும் ஒதுக்கிடவோ அவர்களது நம்பிக்கையாளரின் எந்தவோர் நியாயப்பூர்வமான ஆசையை அடக்கிடவோ நோக்கங்கொண்டிருக்கவில்லை. மனிதனுக்கான கடவுளின் இறுதி வெளிப்பாடு தனதே எனும் எந்தவொரு சமயத்தின் கோரிக்கையையும் தள்ளுபடி செய்வதுடன் தமது சொந்த வெளிப்பாடே இறுதியானது என்பதையும் மறுதலித்திருப்பதன்வழி, பஹாவுல்லா, சமய உண்மையெனும் சார்பியலின் அடிப்படைக் கோட்பாட்டையும் தெய்வீக வெளிப்பாட்டின் தொடர்ச்சியையும் சமய அனுபவத்தின் முனேற்றத்தினையும் ஆழப்பதிய வைக்கின்றார். வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சமயங்களின் அடிப்படையை விசாலப்படுத்தி, அவற்றின் புனித நூல்களிலுள்ள மர்மங்களைத் தெளிவுபடுத்திடுவதே அவரது இலட்சியமாகும். பஹாவுல்லா அவர்களின் நோக்க ஒற்றுமையின் தகுதியற்ற அங்கீகாரத்தினை வலியுறுத்துவதுடன், அவை கோவில்கொண்டுள்ள நித்திய மெய்ம்மையை மறுபடியும் குறிப்பிட்டு, அவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, அவர்களது போதனையில் காணப்படும் தேவையற்றவை மற்றும் போலிகளை இன்றியமையாத மற்றும் நம்பகமானவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்டி, பாதிரிமார்களால்-தூண்டப்பட்டுள்ள மூடநம்பிக்கையிலிருந்து கடவுள்-வழங்கியுள்ள உண்மையை வேறுபடுத்திக் காட்டிடுகின்றார். இதன் அடிப்படையில், அவர்களது ஒருமைத்தன்மை மற்றும் அவர்களது மிக உயர்ந்த நம்பிக்கையின் நிறைவேற்றத்தைப் பிரகடனப்படுத்துவதுடன் அவை சாத்தியமானது மட்டுமின்றி, தவிர்க்கப்பட இயலாதது எனவும் தீர்க்கதரிசனம் செய்திடுகின்றார்.
கடவுளின் திருத்தூதரான முகமதுவைப் பொருத்தமட்டில், இப்பங்கங்களை வாசித்திடும் அவரது நம்பிக்கையாளரில் எவருமே, இஸ்லாமோ அதன் இறைத்தூதரோ அவரது புனித நூலோ அவரது நியமிக்கப்பட்ட வாரிசுகளோ அவரது நம்பகமான போதனையோ எவ்வகையிலும் எத்துணை சிறிய அளவிலும் இழிவுப்படுத்தப்பட்டுவிட்டதாக நினைக்கக்கூடாது. இமாம் ஹுசேய்னின் மரபினரான பாப் அவர்களின் வழித்தோன்றல்; இஸ்லாத்தின் நிறுவனர், அதன் இமாம்கள் மற்றும் புனித நூலின்பால் நமது சமய முன்னோடியானவர் வெளிப்படுத்திய மனோபாவம் குறித்து நபிலின் கதைகளில் காணப்படும் பலதரப்பட்ட மற்றும் ஈர்கத்தக்க சான்றுகள்; முகமதுக்கும் அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கும் குறிப்பாக “இணையற்ற மற்றும் ஒப்பற்றவரான” இமாம் ஹுசேய்னுக்குக் கித்தாப்-இ-இகா’னில் பஹாவுல்லா செலுத்தியுள்ள பிரகாசமிகு புகழுரை; அரேபிய இறைத்தூதுவரின் செய்தியின் செல்லத்தக்கத் தன்மையை உறுதிப்படுத்திடும்பொருட்டு தேவாலயங்களிலும் யூதர் திருக்கோயில்களிலும் உறுதிப்படவும் அச்சமின்றியும் பகிரங்கமாகவும் அப்துல்-பஹா முன்வைத்த வாதங்கள்; இறுதியான ஆனால், முக்கியமாக பொது அரங்குகளில் அப்துல்-பஹா ஆற்றிய சொற்பொழிவுகளைக் கவனமாக கேட்டதன் பயனாக, எங்லிகன் எனும் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபினைச் சார்ந்த ருமேனிய நாட்டின் அரசியார், தாம் தத்தெடுத்த நாட்டின் அரச மதமான கிரிக் ஆர்த்தடோக்ஸ் தேவாலயத்தோடு அவருடைய அரசின் நெருங்கிய தொடர்பினை எதிர்த்திடாதவரான அவர் முகமதுவின் இறைத்தூதர் எனும் செயற்பாட்டை அங்கீகரிக்க உந்தப்பட்டார் என்ற அவரது எழுத்துப்பூர்வமான நற்சான்றிதழ் – இவை யாவும் தனது தாய் சமயத்தோடு பஹாய் சமயம் கொண்டுள்ள உண்மையான மனப்பான்மையை மிகவும் உறுதியான தன்மையோடு பிரகடனப்படுத்துகிறது.