உண்மையைத் தேடுதல்
ஆனால், என் சகோதரனே, ஓர் உண்மையான ஊழியன் ஒருவன், நாள்களின் தொன்மையானவர் குறித்த அறிவுக்கு இட்டுச்செல்லும் வழியினைக் கண்டறிய முயல்வதற்கு உறுதிக்கொண்டிடும்போது, அவன் அவசியம், மற்ற எல்லாவற்றிற்கும் முன்னர், முயன்று பெற்ற அனைத்து அறிவெனும் மறைத்திடும் புழுதியிலிருந்தும் கொடூரமான கற்பனை எனும் கருத்துருவத்தின் மறை குறிப்பிலிருந்தும் கடவுளின் அகச்சார்பான மர்மங்களின் வெளிப்பாட்டின் ஆசனமான, அவனது இதயத்தின் மாசினை அகற்றி, தூய்மைப்படுத்திட வேண்டும். இறைவனது அன்பின் புகலிடமான அவனது இதயத்தினை எல்லாக் கறைகளிலிருந்தும் தூய்மைப்படுத்திடுவதோடு நீர் மற்றும் களிமண்ணால் ஆன அனைத்திலிருந்தும், நிஜமில்லா மற்றும் நிலையில்லா பற்றுகள் அனைத்திலிருந்தும் அவனது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திட வேண்டும்.
விருப்பு அல்லது வெறுப்பின் எந்த எச்சமிச்சமும் இல்லா வண்ணம் அவன் தனது இதயத்தைத் தூய்மைப்படுத்திட வேண்டும். விருப்பானது தவறானவற்றின்பால் கண்மூடித்தனமாக ஈர்க்கப்பட்டுவிடாமல் அல்லது வெறுப்பு உண்மையிலிருந்து விலக்கப்பட்டுவிடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நீங்கள் காண்பதுபோல் இன்று பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட விருப்பு வெறுப்பினால் நித்திய வதனத்தைக் காணும் வாய்ப்பினை இழந்து தெய்வீக மர்மமெனும் கருத்துருவிலிருந்து விலகித்திரிந்து, மேய்ப்பனின்றி, புறக்கணிப்பு மற்றும் தவறு எனும் வனாந்திரத்தில் அலைந்துதிரிகின்றனர்.
தேடுபவன் எல்லா வேளைகளிலும் கடவுளில், அவனது முழு நம்பிக்கையையும் வைத்திட வேண்டும், பூமியிலுள்ள மக்களைத் துறந்து, புழுதி உலகிலிருந்து பற்றறுத்து, பிரபுக்கெல்லாம் பிரபுவான அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன் எவரையும்விட மேலானவனாகத் தன்னைக் கருதிடக்கூடாது. அவனது இதயமெனும் பட்டயத்திலிருந்து இறுமாப்பு மற்றும் பகட்டார்வம் எனும் எல்லா சுவடுகளையும் அகற்றி, பொறுமை மற்றும் பணிவு ஆகியவற்றினை இறுகப்பற்றிடுவதோடு அமைதி காத்து, வீண் பேச்சிலிருந்து விலகியிருக்க வேண்டும். . . .
பஹாவுல்லாவின் மெய்யுறுதி நூல், பக்.192
தன்னிச்சையாக ஆராய்தல்: உண்மையைத் தேடிடும் அனைவர்க்குமான ஒரு முன்தேவை.
பின்வரும் வசனங்களுக்கு எந்த விமர்சனமோ அறிமுகமோ தேவையில்லை:
“நம்பிக்கையுடையோனே! நயவஞ்சகன் ஒருவன் ஏதாவது ஒரு செய்தியோடு உம்மிடம் வந்தால், அதை உறுதிப்படுத்திக்கொள். எவருக்கும் அறியாமல் தீங்கிழைத்திடுவதிலிருந்து கவனமாய் இருங்கள், இல்லாவிடில் நீ செய்தவற்றுக்காக காலமும் வருந்திடுவாய்.”
-குர்’ஆன் 49:6
“தனது சமய நம்பிக்கையை இரகசியமாய் வைத்திருந்த, ஃபாரோவின் குடிகளில் ஒருவன், ஒரு நம்பிக்கையாளன்: “உண்மையாகவே உந்தன் பிரபுவிடமிருந்து தெளிவான (அடையாளங்களோடு) உம்மிடம் வந்துள்ளபோது, -- ‘என் பிரபு அல்லா’ என்று கூறிடும் ஒருவனை நீ கொன்றிடுவாயா? அவன் பொய்யனாயின் அவன் சொன்ன பொய்யின் (பாவம்) அவனையே சாரும்: ஆனால், அவன் உண்மையைக் கூறிடுவானாயின் அவன் எச்சரிப்பதுபோல் (பேரிடர்) உம்மைத் தாக்கிடும்: உண்மையில், வரம்பு மீறுவதோடு பொய் பேசும் ஒருவனுக்கு அல்லா வழிகாட்டிடமாட்டார்!”
- குர்’ஆன் 40:28
“மேலும் உனக்கு வணக்கவுரை செய்யும் எவர் ஒருவருக்கும் இல்லை என்று சொல்லாதே: ‘நீ ஒரு நம்பிக்கையாளனல்ல!’“
-குர்’ஆன் 4:94