நபிகளின் முத்திரை
நபிகளின் முத்திரைமுகமது உங்கள் மனிதர் எவர் ஒருவரது தந்தை அல்ல, ஆனால், கடவுளின் இறைத்தூதுவர் மற்றும் நபிகளின் முத்திரையாவார்.
-திருக்குர்’ஆன் 33:40
(விளக்கவுரைக்கு) பொறுப்பேற்க மறுத்திடுபவர்: கடவுளிடம் மன்றாடுவதோடு உங்கள் பிரார்த்தனைமிகு மனோபாவமும் தூய உள்ளமும் கடவுளது வார்த்தையின் பொருளை அறிந்திடச் செய்யுங்கள்.
“முத்திரை” (அரபிய மொழியில் க’த்தாம்) மேலே காணப்படும் வசனத்தில் பல நூற்றாண்டுகளாகப் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: “கடைசி”, “இறுதி”, “முத்திரை” (ஓர் ஆவணத்தினை முத்திரையிட்டு முழுமைப்படுத்துதல்), “முத்திரை” (அதிகார முத்திரையிட்டு ஓர் ஆவணத்தை அதிகாரப்பூர்வமானதாக்குதல்), இன்னும் வேறு சில பொருள்களைக் கொண்ட சொற்களும் உள்ளன. இந்த சாத்தியமான விளக்கங்களை பஹாய்கள் நிராகரித்திடவில்லை. அதே சமயம் முகமது நபிகள், பஹாய் புனித வாசகங்களில் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டுள்ளதால், (கடைசி எனப் பொருள்படும்) பொதுவான விளக்கத்தை ஏற்கவும் தயாராக இருக்கின்றனர்: ஒரு புதிய சமயம் தோன்றியுள்ளது எனும் கருத்துக்கு இது முரண்பாடாகத் தெரிந்தாலும், தொடர்ந்து வாசிப்பதற்கு ஒருவர் ஊக்குவிக்கப்படுகிறார்.
தங்களது புனித வாசகங்களில் காணப்படும் அடிப்படையில், தங்கள் சமயத்தைத் தொடர்ந்து ஒரு சமயம் தோன்றாது என கடந்தகால சமயங்களின் நம்பிக்கையாளர்கள் நம்புகின்றனர்.
பின்வருவது போன்ற வாசகங்கள்தாம் புதிய வெளிப்பாட்டினை யூதர்கள் ஏற்பதைத் தடுத்திட்டது:
“வார்த்தைகள் மூடப்பட்டு இறுதிகாலம்வரை முத்திரையிடப்பட்டுள்ளதால், டேணியல், நீர் உம் வழியிலேயே செல்லவும்.”
-டேணியல் 12:9/p> பழைய ஏற்பாட்டில் ஷபாத் சட்டம் மாற்றப்படாது என்றொரு வாசகம் உள்ளது. * * * * *
கிருஸ்துவ சகோதர சகோதரிகளைப் பொருத்தவரை, இயேசு நாதருக்குப் பிறகு ஒரு வெளிப்பாடு தோன்றிடாது என நம்பிடச் செய்த வாசகம் இதுதான்.
“வழியும் நானே, உண்மையும் வாழ்வும் நானே; என் மூலமேயல்லாது தந்தையை எந்த ஒரு மனிதனும் நெருங்கிட முடியாது, என இயேசு அவரிடம் கூறினார்.”
-யோவான் 14:6
“விண்ணும் மண்ணும் அழிந்து போகும்: ஆனால், எமது வார்த்தைகள் அழிந்திடா.”
- லியுக் 21:33
“கடந்த காலங்களில் கடவுள், பல சந்தர்ப்பங்களில் இறைத்தூதர்கள் மூலம் பல்வேறு வழிகளில் நம் மூதாதையரிடம் பேசினார். ஆனால், சமீபத்தில் அவர், எவரை அனைத்திற்கும் வாரிசாக்கினாரோ, எவர் மூலம் இப்பிரபஞ்சத்தினை உருவாக்கினாரோ அந்த மகன் மூலம் நம்மோடு பேசினார்..”
-ஹிப்ரு 1:1
இவ்வசனங்களும் வேறு பல வசனங்களும், இயேசுவின் மூலம் மட்டுமே தந்தையை அறிந்திடலாம் என்றும் அவரது வார்த்தைகள் மாற்றப்பட மாட்டா என்றும் வலியுறுத்தியதால், இயேசுவுக்குப் பிறகு இறைத்தூதர் ஒருவர் தோன்றிடுவதைக் கிருஸ்துவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
“தூதர்களின் முத்திரை”, என்பதன் பொருளைக் காணுங்கால், இவ்வசனமும் இஸ்லாம் சமயத்தின் நிறைவு குறித்த மற்ற வசனங்களும் பெரும்பாலான முஸ்லிம்களால் இறுதி என்பதைக் குறிப்பிடுவதாகவே விளக்கப்படுகிறது. மேலும் நபித்துவத்தின் இறுதி மட்டுமல்லாது வெளிப்பாடுகளுக்கெல்லாமே இறுதி என்கின்றனர். இறைவனது வார்த்தைக்கு முடிவே இல்லை என்பதை விளக்கிடும் பல வசனங்கள் குர்’ஆனிலும் இதர பல வாசகங்களிலும் (நபியின் மரபுகளையும் கூற்றுகளையும் உள்ளடக்கிய) ஹடிஸிலும் இயேசுவின் மறுவருகை குறித்தும் மஹ்டியின் வருகை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதால், இவ்வசனங்களுக்கு வேறு பொருள்களும் இருக்கலாம் என முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட இதர கருத்தாளர்களும் விளக்கவுரையாளர்களும் வாதிடுகின்றனர். அவ்விளக்கங்களில் சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:
- தீர்க்கதரிசிகளின் ஒருமை
- இறைத்தூதர் மற்றும் தீர்க்கதரிசிகளின் ஸ்தானத்தில் காணப்படும் வேற்றுமைகள்
- படைப்பின் புதுப்பிப்பு வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அவசியப்படுத்துகிறது
- யூத சமயத்தவர் வழக்கைப்போல நபித்துவம் இஸ்லாத்தின் மரபுரிமையல்ல
- இத்தலைப்பையொட்டி பஹாய் திருவாசகங்களில் காணப்படும் பத்திகள்