சமயத்தின் முழுமை

“இந்நாளில் உனக்காக உனது சமயத்தை நான் நிறைவுப்படுத்தி உன் மீதான என் தயவினை முழுமைப்படுத்தி இஸ்லாத்தினை ஒரு சமயமாக உனக்குத் தேர்ந்தெடுத்துள்ளேன்.”

-குர்’ஆன் 5:3

மெக்காவுக்கான (ஹுஜாத்துல் விடாவுக்கான) தமது இறுதி புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் நபி அவர்களால் இவ்வசனம் வெளிப்படுத்தப்பட்டது. இதுவே குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி வசனம் எனவும் கூறப்படுகிறது. இது பிறகு இஸ்லாமிய ஆண்டு ஆறு அல்லது ஏழில் வெளியிடப்பட்ட சுராத்துல் ம’இதேயில் சேர்க்கப்பட்டுள்ளது.

முகமதுவை(SAW) “நபிமார்களின் முத்திரை” என வருணிக்கும் இவ்வசனம், வசனம் 33:40 ஐ நிறைவுசெய்யும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. வசனம் 33.40, இதே தலத்தின் வேறு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமயத்தின் முழுமை எனும் தலைப்பினை ஒட்டுமொத்த குர்ஆனின் அடிப்படையில் பார்ப்போமானால், (வசனம் 5:3 உட்பட )ஒரு சில வசனங்களில் சமயம் முழுமையடைந்துவிட்டதாக வருணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

எடுத்துத்துக்காட்டாக, ஆப்ரஹாம், ஐசெக் மற்றும் ஜோசப் காலத்திலேயே கடவுளின் சலுகை முழுமையடைந்துவிட்டதை நாம் காண்கிறோம்.

ஆகவே, பிரபுவானவர் உம்மைத் தேர்ந்தெடுத்து, பொன்மொழிகளின் விளக்கங்களைக் கற்றுத்தருவதோடு, உமது தந்தையர்களான ஆப்ரஹாம் மற்றும் ஐசெக் ஆகியோருக்கு ஏற்கனவே முழுமைப்படுத்தியது போல உமக்கும் ஜெக்கோப்பின் பிள்ளைகளுக்கும் அவரது சலுகையை முழுமையாக்கிடுவார். உண்மையாகவே, பிரபு அறிந்தவர், விவேகியானவர்.

- குர்’ஆன் 12:6

கடவுள், மோஸஸ் மூலமும் அவரது சலுகையை முழுமைப்பெறச் செய்தார் என்பதை நாம் காண்கிறோம்.

மேலும், நல்லதைச் செய்து, எல்லாவற்றையும் முழுமையாக விவரிப்பவர்க்கு - (நமது சலுகையை) முழுமைப்பெறச் செய்ய, ஒரு வழிகாட்டியும் கருணையுமான அப்புனிதநூலை நாம் மோஸஸிடம் வழங்கினோம். அதனால், ஒரு வேளை அவரது பிரபுவை சந்தித்திடும்போது அவர்கள் அவரை நம்பிடுவார்களாக.

- குர்’ஆன் 16:154

கடவுளுக்கு அடிபணிவதிலும் அஞ்சுவதிலும் ஒரு தனிநபரின் வெற்றியைப் பொறுத்தே அவரது சலுகையின் முழுமை அமையும் என குர்ஆன் கூறுகிறது

நீ எங்கிருந்து வந்தாலும் புனித மஸூதியை நோக்கி உன் முகத்தைத் திருப்பிடு; நீ எங்கிருந்தாலும் அதன்பால் உன் முகத்தைத் திருப்பிடு. அதனால், நேர்மையானவர்களைத் தவிர வேறு எவரும் உனக்கெதிராகக் குற்றம் சொல்ல முடியாது. எனவே அவர்களுக்கு அஞ்ச வேண்டாம், எனக்கு அஞ்சிடு. அதனால், உனக்கான என் சலுகையை முழுமைப்படுத்திடுவேன், நீயும் சரியான வழியில் நடந்திடுவாய்.

- குர்’ஆன் 2:150

ஆயினும், சலுகையின் “முழுமை” முஸ்லிம்களுக்கு மட்டுமே தனிச்சிறப்பானதாக இல்லாதிருக்கலாம். ஆனால், சமயத்தின் “பூரணத்துவம்” தனிச்சிறப்பானது என சிலர் வாதிடலாம்.