மிகச் சிறந்த உம்மாஹ் (நம்பிக்கையாளர்கள்)

“மனிதர்களுக்காக (நலனுக்காக) நிர்மாணிக்கப்பட்ட நாடுகளிலேயே சிறந்த நாடு நீதான்.”

- குர்’ஆன் 3:110


முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக இச்சிறப்பிற்குப் பொருத்தமானவர்களாக இருந்தனர். உலகின் இதர பகுதிகள் கடவுளைப் புறக்கணித்த வேளையில், முஸ்லிம்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை ஏற்றுக்கொண்டனர். உலகின் இதர பகுதிகள் இருளில் மூழ்கிக்கிடக்கையில், முஸ்லிம்கள் ஸ்பெயின் தேசத்தின் கரையோரப் பகுதி முதல் சீனாவின் எல்லைவரை ஆட்சிபுரிந்தனர். அக்காலகட்டத்தில் கலையும் அறிவியலும் தழைத்தோங்கியதோடு மக்களும் அமைதியும் நீதியும் நிறைந்த சூழலை அனுபவித்தனர்.

மற்ற சமயங்களின் நம்பிக்கையாளர்களும் இதே சிறப்பினைக் கோரினர். யுதர்கள் எப்பொழுதும் தங்களைக் “கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்டோர்” என கூறிக்கொண்டனர். குர்ஆனும் ஒரு நேரத்தில் இவ்வாறு கூறியது:

“இஸ்ரேலின் குழந்தைகளே! நான் உமக்கு எப்படிப்பட்ட சலுகையை வழங்கியிருந்தோம் என்பதையும் மற்ற படைப்புகளைக்காட்டிலும் உமக்கு எங்ஙனம் முன்னுரிமை வழங்கியிருந்தோம் என்பதையும் எண்ணிப்பாருங்கள்.”

- குர்’ஆன் 2:47

இருந்தும் இயேசு தோன்றியதும் அவர்கள் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். ஆயினும், இறைவன் கிருஸ்தவர்களுக்குக் கீர்த்தியை அளித்தார்.

“கவனித்துப் பார்! “இயேசுவே! நான் உம்மை எமது ஸ்தானத்திற்கு உயர்த்தி, தெய்வ நிந்தனையாளர்களிடமிருந்து (பொய்க் கூற்றால்) உமக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கினோம்; சமயத்தைப் புறக்கணித்தவர்களைவிட உம்மைப் பின்பற்றியவர்களை மேன்மையானவர்களாக ஆக்கி, மீண்டும் உயிர்த்தெழும் நாளுக்கு இட்டுச்செல்வோம்: அதன் பிறகு நீங்கள் யாவரும் எம்மிடம் திரும்பிடுவீர். நீங்கள் மறுத்துரைத்தவற்றை அடிப்படையாகக்கொண்டு உமக்கு நீதி வழங்கிடுவோம்,” என அல்லா கூறினார்.

- குர்’ஆன் 3:55

புதிய வாழ்வையும் புதிய போதனையையும் கொண்டுவந்து, மக்களை ஒற்றுமைப்படுத்திடுவதோடு ஏற்கனவே தோன்றிய சமயங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முகமது (SAW) வந்தபோது, ஏற்கனவே தோன்றிய பெரும்பாலான சமயங்களின் நம்பிகையாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். அவரைப் பின்பற்றியவர்கள் புதிய தனிச்சிரப்பினால் ஆசிர்வதிக்கப்பட்டனர்.

ஆயினும், நாம் வசனம் 3:110ஐ மீண்டும் வாசிப்போமாயின், தேசங்களிலேயே மிகச் சிறந்த தேசமாகத் திகழும் இதன் கௌரவமும் தனிச்சிறப்பும் நிலையான ஒன்றல்ல. மாறாக இது சில நிபந்தனைகளுக்குட்பட்டது என்பதோடு ஒரு சில விதிமுறைகளோடும் தொடர்புகொண்டுள்ளது என்பதையும் நாம் அறிந்திடலாம்:

. . . சரியானவற்றைப் பின்பற்றவும் தவறானவற்றை ஒதிக்கிடவும் அல்லாமீது நம்பிக்கைகொள்ளவும் நீ கட்டளையிடப்பட்டுள்ளாய்; திருநூலின் நம்பிக்கையாளர்கள் நம்பிடுவார்களாயின் அஃது அவர்களுக்கு நன்மையளிக்கும்; அவர்களுள் (சிலர்) நம்பிக்கையாளர்களாகவும் பலர் சட்டத்திற்குப் புறம்பானவர்களாகவும் திகழ்கின்றனர்.

- குர்’ஆன் 3:110

குர்’ஆனிலுள்ள மற்ற வசனங்களின் அடிப்படையில் பார்ப்போமாயின், இக்கூற்றின் தன்மை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ளப்படக்கூடும்:

இவ்வாறகவே நீங்கள் மக்களுக்குச் சான்றுகளாகத் திகழவும், இவ்விறைத்தூதர் உங்களுக்குச் சான்றாகத் திகழவும் உங்களை ஒரு நடுநிலை தேசமாக உருவாக்கியுள்ளோம். வந்த வழியே திரும்பி ஓடிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காண்பதற்காகவே, நீங்கள் முன்பு கடைப்பிடித்த கிப்லாவை நியமித்திருந்தோம். இறைவனால் வழிகாட்டப் பட்டோரைத் தவிர பிறருக்கு அது கடினமான (சோதனையாகவே) இருந்துள்ளது. உங்கள் நம்பிக்கையை வீனாக்குவது கடவுளின் நோக்கமல்ல. இறைவன் இரக்கமிக்கவர்; கருணையாளர்.

- குர்’ஆன் 2:143

கடவுளின் போதனைகளின்படி தொடர்ந்து வாழ்ந்தால்தான் முஸ்லிம் சமூகத்தினர் தாங்களே சிறந்தவரென கூறிக்கொள்ள முடியும்.