புதிய சமயத்தை நிராகரித்தல்

“‘நாங்கள் நம்புகிறோம்’ எனக் கூறுவதால் தாங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுவர் என மனிதர்கள் எண்ணுகின்றனரா?”

- குர்’ஆன் 29:2


புதிய இறைத்தூதர்களையும் அவர்கள் கொண்டுவரும் சமயங்களையும் நிராகரிப்பதே எப்பொழுதும் மக்களின் பழக்கமாக இருக்கிறது. இஃது ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்பட்டுள்ளது:

“ஹா! (எனது) ஊழியர்களைப் பொருத்தவரை! அவர்களிடம் இறைத்தூதர் ஒருவர் வரவில்லை, ஆயினும் அவரை ஏளனஞ் செய்கின்றனர்!”

- குர்’ஆன் 36:30

“ஆயினும் அவர்கள் உங்களை நிராகரித்திடுவாராயின், அவ்வாறே தெளிவான வாதங்கள், வேதபுத்தகம் மற்றும் பிரகாசமிக்க நூல் ஆகியவற்றோடு உங்களுக்கு முன்னர் வந்த தீர்க்கதரிசிகளையும் நிராகரித்தனர்.”

- குர்’ஆன் 3:184

“. . . ஒவ்வொரு தேசமும் தங்கள் இறைத்தூதரைக் கட்டுப்படுத்துவதுடன் போலியாக வாதிட்டு, உண்மையை மறுத்திடுகின்றனர்.”

- குர்’ஆன் 40:5

இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளை முன்வைத்தபோதிலும் முன்னதாகத் தோன்றிய சமயங்களின் நம்பிக்கையாளர்கள் புதிய இறைத்தூதர் ஒருவரின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த போதிலும் அவருடைய வருகையை விரைவுப்படுத்திடுமாறு இறைவனிடம் தீவிரமாய்ப் பிரார்த்தித்தபோதிலும் ஏன் அவரை நிராகரிக்கின்றனர் என்பதற்கான காரணங்களைப் பற்றி சிந்தித்திடுவது பயனுள்ளதாய் இருந்திடும்.


எல்லா சமயங்களின் புனித நுல்களைக் குறிப்பாக குர்’ஆனையும் (ஓரளவுக்கு வரலாற்று நூல்களையும்) நாம் கற்றிடும்போது இது போன்ற நிராகரிப்பு மற்றும் எதிர்ப்புக்கான உருமாதிரியோடு காரணங்கள் மற்றும் தடயங்களையும் நாம் காணத்தொடங்குவோம். இக்காரணங்களை அறிந்து அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் நமது முன்னோர்களை எந்த தவறுக்காகக் கண்டனம் செய்தோமோ அதே தவற்றினை நாமும் செய்திடாமல் தவிர்த்திடலம்.


இந்நிராகரிப்புக்கான காரணங்களில் ஒன்று, போலியான இறைத்தூதர் (டஜ்ஜால் அல்லது எதிர் இயேசு) ஒருவரால் தவறாக வழிநடத்தப்பட்டிடுவோமோ என்ற அச்சமாகும். இவ்வலைத்தளத்தின் வேறொரு பகுதியில் இப்பிரச்சனை விளக்கப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட அச்சமானது உண்மையான இறைத்தூதரை நாம் கண்டுகொள்வதிலிருந்து நம்மைத் தடுத்திட நாம் அனுமதிக்கக் கூடாது. ஒரு பழமொழி கூறுவதுபோல், “தொட்டி நீரோடு குழந்தையையும் தூக்கி எறிதல்” கூடாது.